தமிழ்நாடு

சீர்காழியில் 1975 விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா

DIN

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர்கள் பக்கிரிசாமி, ராஜமாணிக்கம் ,நற்குணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பாரதி எம்எல்ஏ கலந்து கொண்டு சீர்காழி பகுதியை சேர்ந்த சபாநாயகம் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி, எல் எம் சி மேல்நிலைப்பள்ளி, சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 17 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ 78 லட்சத்து 11 ஆயிரத்து 165 ரூபாய் மதிப்பிலான 1975 சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கினர். 

அவர் பேசுகையில்,

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஅனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக உருவாக்கி காட்டினார். அதனை தொடர்ந்து ஜெயலிதாவின் நல்ஆசியோடு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த நான்காண்டுகளாக சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தற்போதைய தமிழக முதல்வர் கல்வித் துறைக்காக 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சாதனை புரிந்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள 36 துறைகளை விட கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் அரசு  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதஉள் இட ஒதுக்கீட்டால் தற்பொழுது 399 மாணவ மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவர்களுக்கு உண்டாகும் அனைத்து செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும். சீர்காழி சட்டமன்ற தொகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று புத்தூரில் அரசு கலைக்கல்லூரி ரூ 10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. 

இதேபோல் தற்காஸ் உப்பனாறு ரூ.10 கோடி மதிப்பீட்டிலும், தென்னாம்பட்டினம் உப்பனாற்றில் ரூ 10 கோடி மதிப்பீட்டிலும், வெள்ளப்பள்ளம் உப்பனாறில் ரூ.32 கோடி தடுப்பணைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் சீர்காழி பகுதியில் உயர உள்ளது. 

மாணவர்கள் அரசு திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக கல்வி பயில வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பேரூர் கழக செயலாளர் போகர் ரவி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT