தமிழ்நாடு

அண்ணா நினைவு நாள்: ஈரோட்டில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

DIN

ஈரோட்டில் அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாளையொட்டி பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட அவைத் தலைவர் பி.சி.ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணைமேயர் கே.சி. பழனிசாமி, பகுதி செயலாளர் மனோகரன், ஜெகதீஸ்வரி தங்கமுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் சின்னையன், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் நந்தகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் ஈரோடு செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாவட்ட செயலாளர் சோலா ஆசைத்தம்பி தலைமையில் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT