தமிழ்நாடு

விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம்: பேரவையில் மசோதா தாக்கல்

DIN

விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்க இன்று (பிப்.5) சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை பிரித்து தனியாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளை நிர்வகிக்கும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் தனியாக பல்கலைக் கழகம் உருவாக்கப்படவுள்ளது.

கல்லூரிகள் நிர்வாக வசதிக்காக விழுப்புரத்தில் அமைக்கப்படும் பல்கலைக் கழகம் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றவுள்ளார். அதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT