உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

யானைகள் இறப்பு வழக்கு: சிபிஐ விசாரிக்க உத்தரவு

தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதாகவும், தோல் உள்ளிட்டவற்றிற்காக விலங்குகள் வேட்டையாடப்படுவதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது யானைகள் தந்தங்களுக்காக கடத்தப்படுவது, சர்வதேச சந்தையாக வளர்ந்துள்ளது. தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது ஏற்கத்தக்கதல்ல. யானைகளை பாதுகாப்பது நமது கடமை. 

தந்தங்களுக்காக யானையை வேட்டையாடுபவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளனர். இதனால், யானைகள் இறப்பது குறித்து தமிழகத்தைத் தாண்டிய விசாரணை அவசியமாகிறது.

எனவே தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT