உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கின் 2017 இறுதித் தீர்ப்பின்படி திருவள்ளூரில் உள்ள சுதாகரன் மற்றும் இளவரசியின் சொத்துகள் 41.22 ஏக்கர் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பபட்டுள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா தகவல் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உறவினர்களுக்குச் சொந்தமான சொத்துகள் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த வேலகாபுரம் என்ற கிராமத்தில் மெடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் 1995-இல் பத்திரப்பதிவு செய்துள்ள 41.22 ஏக்கர் புஞ்சை நிலம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
V.N.சுதாகரன், J.இளவரசி ஆகியோர் பெயர்களில் 1995-ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்ட புஞ்சை நிலம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலம் தமிழக அரசுக்குச் சொந்தமானது எனவும், அந்த இடத்திலிருந்து வரும் வருவாய் அனைத்தும் தமிழக அரசுக்குச் சொந்தம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.