திருச்சியில் பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். 
தமிழ்நாடு

திருச்சியில், பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி மக்கள் சாலை மறியல்

திருச்சியில் பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN


திருச்சியில் பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதியில் சாலை விரிவாக்க பணியின் போது அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து கடந்த 5 நாள்களாக சரி செய்யப்படாமல் இருந்து வந்துள்ளது. 

திருச்சியில் பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

சரிசெய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனை கண்டித்து வெள்ளிக்கிழமை காலை திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில், காலிக்குடங்களுடன் மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் கிராம நிர்வாக அலுவலர் அனுப்பிரியா, காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

பிக் பாஸ் 9: தீபக்கை நேரலையில் வரைந்து அசத்திய கமருதீன்!

எதிர்பாராத கிளைமேக்ஸ்! மெளனம் பேசியதே தொடர் நிறைவு!

ஆயிரம் கிலோ அன்னம்! தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!!

SCROLL FOR NEXT