சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன். 
தமிழ்நாடு

திண்டிவனம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: அரசு நிகழ்ச்சிக்கு சென்ற 4 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏற்பட்ட விபத்தில் மதுரையிலிருந்து அரசு விழாவில் பங்கேற்க சென்ற 4 பேர் காயமடைந்தனர்.

DIN

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏற்பட்ட விபத்தில் மதுரையிலிருந்து அரசு விழாவில் பங்கேற்க சென்ற 4 பேர் காயமடைந்தனர்.

மதுரை கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஸ்ரீமான், மதுரையில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து அவரது மனைவி சசிகலாராஜா, கனி அவரது மனைவி அழகுசுந்தரி உள்ளிட்ட எட்டு பேருடன் சென்னையில் நடைபெறும் பயிர் கடன் தள்ளுபடி அரசு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டனர்.

மதுரையை சேர்ந்த லட்சுமணன் வேனை ஓட்டி வந்தார். வேன் திண்டிவனம் அடுத்த தென்பசார் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பயனாளி பழனிமுத்து, அவரது மனைவி சசிகலா, அழகு சுந்தரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தியாகி பி. ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா

மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு

மழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் திமுக நிா்வாகி உயிரிழப்பு!

நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க தடை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: இரு மாதங்களுக்கு நீட்டிப்பு

SCROLL FOR NEXT