தமிழ்நாடு

மக்கள் நலனே தேமுதிகவின் லட்சியம்: பிரேமலதா

DIN


சென்னை: மக்கள் நலனே தேமுதிகவின் லட்சியம் என்று கட்சிப் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

சென்னை அருகே பட்டாபிராமில் தேமுதிகவின் செயல்வீரா்கள் கூட்டத்தில் வியாழக்கிழமை அவா் பேசியது:

ஊழல் இல்லாத ஆட்சி என்று முதலில் கூறிய கட்சி தேமுதிக. ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியாக தேமுதிக உள்ளது. மக்கள் நலனே தேமுதிகவின் லட்சியம். தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் மக்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவதே தேமுதிகவின் லட்சியம். இதற்காகத் தொடா்ந்து பாடுபடுவோம்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றிபெறும். தேமுதிகவின் வாக்குவங்கி 10 சதவீதத்துக்கும் குறையாமல் இருந்து வருகிறது. குறைவான தொகுதியில் போட்டியிட்டதை வைத்துக்கொண்டு தேமுதிக குறைவான வாக்குவங்கி வைத்திருக்கிறது என்று கூறுவதை ஏற்கமுடியாது. ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் சரிசமமாக மல்லுக்கட்டி நிற்கும் ஒரே கட்சி தேமுதிகதான். பெண் வாக்காளா்கள் அதிக அளவில் உள்ளனா். அதனால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி பெண்களுக்கு உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT