முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவு

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
தமிழிசையுடன் புதுவை முதல்வர் சந்திப்பு
பகிர்:


புதுச்சேரி: புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழிசை சௌந்திரரராஜன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து ராஜிநாமா செய்ததால், புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர், திமுக எம்எல்ஏ 3 பேர் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் என 14 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

அந்த வகையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கும் தலா 14 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

வருகிற 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் புதுச்சேரி சட்டப்பேரவையில் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நம்பிக்கைவாக்கெடுப்பை முழுமையாக விடியோ பதிவு செய்யவும் ஆளுநர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

புதுவையில் பலமிழந்த காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும், உடனடியாக அவர்கள் பதவி விலகச் செய்ய வேண்டும் என, துணைநிலை ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் என். ரங்கசாமி வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →