தமிழ்நாடு

மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி 

DIN


திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியினை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி கொடியசைத்து தொடங்கி  வைத்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவினை முன்னிட்டு ஆலய திடலில் ஜல்லிக்கட்டு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மணப்பாறை சுற்றுவட்டார பகுதி மற்றும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 700-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணுகின்றனர். போட்டியை தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் மக்களவை உறுப்பினரும், அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார், எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகர் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.

வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளை

ஆலயத்தில் ஊர் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டதை அடுத்து, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட  மாவட்டத்திலிருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டு வருகிறது. 50, 50 தொகுப்பாக காளையர்கள் களத்தில் உள்ளனர்.

வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளின் திமிலை வீரர்கள் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT