புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் தலைமைச் செயலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி ஏராளமான அரசு ஊழியர்கள் பேரணியாகப் புறப்பட்டனர்.
பேரணியாகச் சென்ற அரசு ஊழியர் சங்கத்தினர், தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர் சங்கத்தினரின் போராட்டம் காரணமாக தலைமைச் செயலக வாயில்கள் அரைமணி நேரம் மூடப்பட்டிருந்தது. தலைமைச் செயலகத்துக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அரசு ஊழியர்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.