தமிழ்நாடு

பாடப்புத்தகத்தில் சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவர்: டிடிவி தினகரன் கண்டனம்

DIN

சென்னை: சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளதற்கு அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சிபிஎஸ்இ  எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை, மாணவச் செல்வங்களுக்கு இப்படி தவறாக கற்பிப்பதை ஏற்க முடியாது. அந்தப் படத்தை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குவதுடன், இனி இத்தகைய தவறுகள் நிகழாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை சிபிஎஸ்இ மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT