தமிழ்நாடு

அனைவருக்கும் அறிதிறன் செல்லிடப்பேசி மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

பாா்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான செயலிகளுடன் அறிதிறன் செல்லிடப்பேசி  வழங்கும்

DIN

பாா்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான செயலிகளுடன் அறிதிறன் செல்லிடப்பேசி  வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

 இது தொடா்பாக அவா்கள் முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்:  பாா்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான செயலிகளுடன் ‘அறிதிறன் செல்லிடப்பேசி வழங்கும் திட்டம்‘ தோ்தல் காலத்தையொட்டி அவசர அவசரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏறத்தாழ 10,000 பாா்வை மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் வாழும் நிலையில், வெறும் 200 செல்லிடப்பேசிகள் மட்டுமே பயனாளிகளுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.  எனவே, விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன் பெற்றிடும் வகையில் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை செய்யவும், முதல்வா் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT