தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

தமிழகத்தில் சில இடங்களில் திங்கள்கிழமை (பிப்.22) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை(பிப்.22) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 23-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வட வானிலை:

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில்..: சென்னையை பொருத்தவரை திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்

புதுச்சேரி, கடலூரில் தலா 190 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தலா 100 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 80 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை, புவனகிரியில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT