தமிழ்நாடு

அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம்: ஓ. பன்னீர்செல்வம்

DIN


சென்னை: தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்தில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

அதில், எல்ஐசி மற்றும் யுனைடட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டம் துவக்கப்படுகிறது.

இதற்கான செலவுத் தொகையை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். 

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 55.67 இலட்சம் தகுதியான குடும்பங்களுக்கு, குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும், குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும், நிரந்தர இயலாமைக்கு 2 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT