ஈரோட்டில் ஜெயலலிதா சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை 
தமிழ்நாடு

ஈரோட்டில் ஜெயலலிதா சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73- வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. 

DIN

ஈரோட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73- வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி தமிழகம் முழுவதும் ஜெயலலிதா சிலைக்கும், அவரது உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம் கே.எஸ்.தென்னரசு, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து எம்.ஜி .ஆர் சிலைக்கும் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்தனர். 

பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும் எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம் கே.எஸ்.தென்னரசு, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் ஆகியோர் சிலைகளுக்கும்  எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே சி பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவ மூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், ஜெயராஜ், கோவிந்தராஜ், முருகசேகர், தங்கமுத்து, ராமசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவனை மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து எம்எல்ஏக்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்! செய்திகள்:சில வரிகளில் 4.8.25 | Rahul Gandhi | DMK | MKStalin

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமலின் புதிய படத்திற்கான பூஜை!

SCROLL FOR NEXT