தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 467 பேருக்கு கரோனா

DIN

தமிழகம் முழுவதும் 467 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் இன்று 50,583 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் புதிதாக 467 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதுவரை கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 8,50,096 ஆக உள்ளது. சென்னையில் இன்று புதிதாக 168 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 299 பேருக்குத் தொற்று உள்ளது. 
கரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் மட்டும் 463 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 3,01,520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பால் இன்று 5 போ் உயிரிழந்துள்ளனா். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 11,458ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுடன் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவா்கள் எண்ணிக்கை 8,997 ஆக உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT