தமிழ்நாடு

கம்பம் பகுதியில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு விழிப்புணர்வு

DIN

தேனி மாவட்டம் கம்பம் நகரம் மற்றும் வட்டாரப்பகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக குழந்தைகள் விழிப்புணர்வு கூட்டத்தில் பாதுகாப்பு அலுவலர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வட்டாரளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பழனிமணி கணேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரா.தங்கராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் கிரிஜா பேசும் போது, 

கம்பம் நகர் மற்றும் வட்டாரப்பகுதிகளில் குழந்தை திருமணம் நடைபெற்று வருகிறது. கிராமப்புற சுகாதார நிலையத்திலிருந்து குறைந்த வயதில் திருமணமாகி, கர்ப்பிணியாகி இருப்பதைப் பற்றி தகவல் தெரிவித்தார்.

ஆனால். கம்பம் நகரில் 16 வயது பெண்ணுக்கு திருமணமாகி 6 மாத கர்ப்பிணியாக தற்போது உள்ளார். இவர் கம்பம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பதிவு பெற்று சிகிச்சை பெற்று வருகிறார், ஆனால் இது பற்றி சுகாதார நிலையத்தினர் தகவல் தெரிவிக்கவில்லை, புகார் கொடுத்தும் காவல் நிலையத்தில் நடவடிக்கை இல்லை என்றார். இதனால் கூட்டத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர். குழந்தை திருமணம் மற்றும் பாதுகாப்பு பற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, மேலாளர் பாலமுருகன் மற்றும் சமூக சேவகிகள், குழந்தைகள் பாதுகாப்புப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT