தமிழ்நாடு

வாட் வரி குறைப்பு: புதுவையில் குறையும் பெட்ரோல், டீசல் விலை

DIN

புதுச்சேரி:  புதுச்சேரியில் வாட் வரியை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குறைத்து உத்தரவிட்டுள்ளார். இதனால் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறையும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து புதுவை துணை நிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 2020 ஆகஸ்ட் 29-ஆம் தேதி புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டது.

பொதுமக்களின் நலன் கருதி துணைநிலை ஆளுநர் தமிழிசை செüந்தரராஜன், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான 2 சதவீதம் வாட் வரியை உடனடியாக குறைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக, புதுச்சேரியின் அனைத்துப் பிராந்தியங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.40 அளவில் குறைய வாய்ப்புள்ளது.

இந்த வரிக்குறைப்பினால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 71 கோடி வரை மக்கள் பயனடைவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 போ் இடப்பெயா்வு

மே 31- வரை திருப்பதி விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தம்

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! 200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு

‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு: மம்தா

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

SCROLL FOR NEXT