தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்னக் கொடை உற்சவம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாசி மகத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்னக் கொடை உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று ஆண்டாள் கோவிலில் அன்னக் கொடை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல் சனிக்கிழமை மாசிமகம் என்பதால் அன்னக் கொடை உற்சவம் நடைபெற்றது.  இதற்காக பிரத்யேகமாக சுமார் 50 கிலோ தயிர்ச் சாதம் தயார் செய்யப்பட்டு மதியம் ஆண்டாள் ரங்கமன்னார் க்கு படைக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. 

ஆண்டாளுக்கு படைக்கப்பட்ட தயிர்ச் சாதம்

அன்னக் கொடை நிகழ்ச்சியை முன்னிட்டு ஆண்டாள் ரங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.  பின்னர் தயிர்ச் சாதம் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்பட்டது

அன்னக் கொடை உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புப் பூஜையைக் காண சனிக்கிழமை நண்பகல் ஆண்டாள் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர் இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT