தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: தொ.மு.ச. பேரவை

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை தெரிவித்துள்ளது. 

DIN

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து தொ.மு.ச. பேரவை பொதுச்செயலர் மு.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம் திடீரென சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்து நேற்றுமுதல் (26.02.2021) நடத்தை விதிகள் அமுலுக்கு வருவதாக அறிவித்துவிட்டது. இதனை காரணம் காட்டி எங்களால் எதுவும் செய்யமுடியாது என்று அரசு கைவிரித்துவிட்டது. 
பின்னர் தொழிலாளர் ஆணையர் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொழிற்சங்கங்களும், நிர்வாகமும் சகஜநிலைக்கு திரும்ப வேண்டும், வேலைநிறுத்தத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது, மற்றுமுள்ள பிரச்னைகளை தொடர்ந்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழில் அமைதி காத்திட அறிவுரை வழங்கியுள்ளார். 
அதேபோல் அனைத்து கட்சி தலைவர்களும் வைத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்கவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தற்சமயம் இப்போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதென அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் ஒப்புதலோடு முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT