தமிழ்நாடு

2023-க்குள் குடிசையில்லா மாநிலமாக தமிழகம் மாறும்: முதல்வர்

DIN

2023-ம் ஆண்டுக்குள் தமிழகம், குடிசைகள் இல்லா மாநிலமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் வீடு கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

வீடு கட்டும் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.116.27 கோடி செலவில் 1,152 வீடுகள் கட்டப்படவுள்ளன. இவற்றை அடுத்த 12 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

சென்னை பெரும்பாக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளதாகவும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் 2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசையில்லாத மாநிலமாக மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT