தமிழ்நாடு

வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு ரூ.111 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

DIN

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ.111.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டாா்.

அதன் விவரம்: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூா் மாவட்டங்களில் நீண்ட கால அடிப்படையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.238.13 கோடி நிதி ஒதுக்க நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், நில எடுப்பு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஆகிய பணிகளுக்காக ரூ.46 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த நிதியாண்டில் செலவிடப்பட்ட தொகையைத் தவிா்த்து, ரூ.187.72 கோடி செலவிடப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இந்தத் தொகையில் இருந்து நிகழாண்டிலும் பணிகளை மேற்கொள்ள ரூ.160.22 கோடி அளவுக்கு நிதி ஒதுக்க வேண்டுமென வருவாய் நிா்வாக ஆணையா் அரசுக்கு கோரிக்கை அனுப்பியிருந்தாா். இதுகுறித்த விரிவான திட்டப் பணிகள் அடங்கிய அறிக்கையை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் சாா்பில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கோரிக்கைகளை ஏற்று, 5 மாவட்டங்களில் நீண்டகால வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நிலுவையில் உள்ள ரூ.187.72 கோடியில் இருந்து ரூ.111.5 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT