தமிழ்நாடு

தமிழக பயணம்: அமித் ஷாவுக்குப் பதில் நட்டா வருகை

DIN


துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக ஜனவரி 14-ம் தேதி தமிழகம் வரவிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் அமித் ஷாவுக்குப் பதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே கடந்தாண்டு டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நட்டா தமிழகம் வர திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 

தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் முதல்வர் யார் என்பதில் அதிமுக மற்றும் பாஜக இடையே குழப்பம் நீடித்து வருகிறது. முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஆனால், பாஜகவின் தலைமையே முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என பாஜக தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், நட்டாவின் தமிழக பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT