தமிழ்நாடு

எங்கே, எப்படியிருந்தால் எவ்வளவு ஆபத்து? விளக்குகிறார் பிரப்தீப் கௌர்

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் மெல்ல குறைந்து வந்தாலும் புதிய அதிதீவிர கரோனா பரவல் அச்சத்தை அதிகரிக்கவே செய்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு சுகாதாரத் துறையில் பணியாற்றுவோர் தங்களது கருத்துகளை வெளியிட்டிருக்கும் நிலையில், தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கௌர் இது ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, உள்ளரங்கில், காற்றோட்டம் இல்லாமல், அதிக நேரம், கூட்டமாக, கத்திக் கொண்டு, பேசிக் கொண்டு, முகக்கவசம் அணியாமல் இருப்பது மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த வரைபடத்தில், குறைந்த நபர்களுடன் அமைதியாக காற்றோட்டம் இல்லாமல் இருந்தாலும் தொற்று அபாயம் குறைவு

அதே வேளையில், உள்ளரங்கில், காற்றோட்டம் இல்லாமல், அதிகக் கூட்டம், அதிக நேரம் இருந்து அமைதியாக இருந்தாலும் கரோனா தொற்றுப் பரவும் அபாயம் அதிகம்.

மேலும், உள்ளரங்கில் காற்றோட்டம் இல்லாமல், அதிகக் கூட்டம், அதிக நேரம், கத்திக் கொண்டு இருந்தால், கரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
 

இதனை விளக்கும் வகையில் ஒரு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT