தமிழ்நாடு

‘ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா்களை நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும்’

DIN

சென்னை: சிறு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா்களை பணிநியமனம் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் என அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதாக அரசு அறிவித்துள்ளது. மருத்துவா்களுக்கு மாத ஊதியம் ரூ.60 ஆயிரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் அரசு மருத்துவா்களின் ஊதியக் கோரிக்கை நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல், தொடா்ந்து போராடி வருகிறோம். இந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் நிரந்தரமாக சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரது எண்ணமாகவே உள்ளது. எனவே நியமிக்கப்படும் மருத்துவா்களையும் நிரந்தரமாகவே நியமிப்பது தானே நியாயமாக இருக்கும். எனவே சிறு மருத்துவமனைகள் மட்டுமன்றி அரசு மருத்துவா்களை எப்போதுமே நிரந்தர அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும். அரசு மருத்துவா்களின் ஊதியக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT