முகப்பு
தமிழ்நாடு

பல்லடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு 

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் இரண்டு நாள் மாநில மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
மாநாட்டில் பொதுச்செயலாளர் பாரி வேலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசினார்.
பகிர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் இரண்டு நாள் மாநில மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது. 

மாநாட்டில் சங்க கொடியை ஏற்றிவைத்து, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் சண்முகம் வரவேற்றார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் மாநிலத் தலைவர் ராமமூர்த்தி துவக்க உரையாற்றினார். 

வேலை அறிக்கையைப் பொதுச்செயலாளர் பாரி தாக்கல் செய்தார். மாநிலப் பொருளாளர் விஜயபாஸ்கர் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த மாநாட்டில் முன்னாள் மாநிலத் தலைவர்  சுப்பிரமணியம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கௌரவ தலைவர் பரமேஸ்வரன், திருப்பூர் இந்தியத் தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் தங்கராஜ், மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →