வஉசி பூங்காவில் பறவைகளின் உடல்நிலை கண்காணிக்க வன உயிரியல் ஆர்வலர்கள் வேண்டுகோள்
கேரளத்தில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக கோவை வஉசி பூங்காவில் உள்ள பறவைகளின் உடல்நிலை கண்காணிக்க வன உயிரியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கேரளத்தில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக கோவை வஉசி பூங்காவில் உள்ள பறவைகளின் உடல்நிலை கண்காணிக்க வன உயிரியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம், ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென செத்து மடிந்தன. இதனால் இறந்த வாத்துகளிலிருந்து 8 மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் “எச் 5 என் 8” வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. அங்குப் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், தொடர்ந்து வாத்து கோழிகள் உயிரிழந்து வருகின்றன.
கேரளாவில் பறவை காய்ச்சல், தமிழகத்துக்குள் வராமல் தடுக்க கோவை வாளையார் சோதனை சாவடியில் கால்நடை துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கேரளாவிலிருந்து கோழி, வாத்து முட்டை, இறைச்சி, தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்களைத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் ,மேலும் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் மற்ற வாகனங்களுக்கு குளோரின்-டை-ஆக்ஸைடு தெளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் வாத்து, மயில், கொக்கு உள்ளிட்ட பறவைகள் அதிகம் உள்ள வஉசி உயிரியல் பூங்காவில் பறவைகளின் உடல்நிலையைக் கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பூங்காவில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டுமெனவும் வன உயிரியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.