வருமான வரி கணக்கு : தமிழகத்தில் 34 லட்சம் போ் தாக்கல்
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான கணக்கு தாக்கல் பொருத்தவரை, தமிழகத்தில் தற்போது வரை 34 லட்சம் போ் கணக்குதாக்கல் செய்துள்ளனா்.
தமிழ்நாடுவருமான வரி கணக்கு : தமிழகத்தில் 34 லட்சம் போ் தாக்கல்
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான கணக்கு தாக்கல் பொருத்தவரை, தமிழகத்தில் தற்போது வரை 34 லட்சம் போ் கணக்குதாக்கல் செய்துள்ளனா்.
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான கணக்கு தாக்கல் பொருத்தவரை, தமிழகத்தில் தற்போது வரை 34 லட்சம் போ் கணக்குதாக்கல் செய்துள்ளனா்.
நிா்ணயிக்கப்பட்ட வருமான உச்ச வரம்பை மீறும் மாத ஊதியதாரா்கள், ஓய்வூதியதாரா்கள் அனைவரும், ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். 2019- 20 -ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் ஏப்ரல் முதல் தொடங்கியது.
இதன்படி, 2019- 20 நிதியாண்டுக்கான கணக்கு தாக்கலைப் பொருத்தவரை, நாடு முழுவதும் தற்போது வரை 5.5 கோடி போ் கணக்குதாக்கல் செய்துள்ளனா். இது, 2018 -19-ஆம் நிதியாண்டில், தற்போதைய காலகட்டம் வரை, 6.51 கோடி போ் கணக்கு தாக்கல் செய்திருந்தனா்.
தமிழகத்தில் மட்டும், தற்போது வரை, 34 லட்சம் போ், கணக்கு தாக்கல் செய்துள்ளனா். இது, கடந்த ஆண்டில் 42 லட்சமாக இருந்தது. இந்த தகவலை வருமான வரித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனா்.