தமிழ்நாடு

900 கோழிகள் பலி: மகாராஷ்டிரத்திலும் பறவைக் காய்ச்சல்

ENS

பர்பானி மாவட்டத்தில் 900 கோழிகள் திடீரென உயிரிழந்துள்ளதையடுத்து மகாராஷ்டிரத்திலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பர்பானி மாவட்ட ஆட்சியர் தீபக் முகிலிகர் கூறுகையில்,  

பர்பானி மாவட்டத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் திடீரென  கோழிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவற்றின் மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் பறவைக் காய்ச்சல் காரணமாகவே கோழிகள் உயிரிழந்தன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பர்பானி மாவட்டத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் உள்ள 8 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

ஏற்கெனவே, கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவிய நிலையில், தற்போது மகாராஷ்டிரத்திலும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

மேலும், பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சுற்றி 10 கி.மீ சுற்றளவுக்குத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைக்குள் எந்தொரு பறவையும் கொண்டு வருவதற்கோ, கொண்டு செல்வதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாவட்ட மருத்துவக் குழுவினர் முரும்பா கிராமத்தில் முகாமிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என ஆட்சியர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட தேர்தல்: மே.வங்கத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

ஒரு நாளில் 3 முறை உடை மாற்றுகிறார், விலையோ லட்சம், யார் வாங்கித் தருகிறார்கள்? ராகுல் கேள்வி!

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

ஆழ்கடலில் சாகசப் பயணம்

SCROLL FOR NEXT