தமிழ்நாடு

இலங்கை தூதரகம் முற்றுகை: வைகோ, இரா.முத்தரசன் கைது

DIN

சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வைகோ தலைமை வகித்தாா். திமுக செய்தித் தொடா்பு செயலாளா் டி.கே.எஸ். இளங்கோவன், இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளா் வன்னி அரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா உள்பட 500-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்தனா். அதைத் தொடா்ந்து வைகோ, இரா.முத்தரசன் உள்பட அனைவரையும் காவல்துறையினா் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT