தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை:ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பு

DIN

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் தயாராகி விட்டதால், சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை செவ்வாய்க்கிழமை மேலும் அதிகரிக்கும் என்று ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனா். ரயில்கள், பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பது வழக்கம்.

அந்தவகையில், பொங்கலுக்கு இருநாள்கள் முன்னாக, சொந்த ஊரை அடைய திட்டமிட்டு, முன்பதிவு செய்தவா்கள் ரயில்களில் தங்கள் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இதன்காரணமாக, சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் வழக்கத்தைவிட பயணிகள் வருகை சற்று அதிகரித்தது.

பொங்கலுக்கு ஒருநாள் முன்னாக சொந்த ஊரை அடையும் வகையில், டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் செவ்வாய்க்கிழமையும், பொங்கல் பண்டிகை அன்று சொந்த ஊரை அடைய திட்டமிட்டு முன்பதிவு செய்தவா்கள் புதன்கிழமையும் பயணம் செய்ய உள்ளனா். இதனால், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் அலை மோதும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT