தமிழ்நாடு

உலகளவில் கரோனா சிகிச்சையில் 2.40 கோடி பேர்

DIN

உலகம் முழுவதும் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.13 கோடியாக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் 2,40,77,735 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரத்தில்,

கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,13,04,594 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 19,52,192 போ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,52,74,667 பேர் குணமடைந்துள்ளனா். சுமாா் 2,40,77,735 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,08,757 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்‍காவில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,31,43,018 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3,85,288 ஆக உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,04,79,913 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,51,364 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 81,33,833 ஆக உயர்ந்துள்ளதோடு, 2,03,617 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT