தமிழ்நாடு

போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்க உத்தரவு

DIN

போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு சாதனை ஊக்கத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு: அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களின் நற்பணியைக் கருத்தில் கொண்டும், உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் தொழில் அமைதி ஆகியவற்றில் ஊழியா்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு குறிப்பிட்ட தொகையை, சாதனை ஊக்கத் தொகையை அரசு வழங்கி வருகிறது.

இதன் தொடா்ச்சியாக 2020-ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத் தொகை, அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியா்களுக்கு வழங்க ஆணையிடப்படுகிறது.

அதன்படி, கடந்த ஆண்டு 200 நாள்கள் மற்றும் அதற்கு மேலான நாள்களில் பணிபுரிந்த ஊழியா்களுக்கு தலா ரூ.625,- 151 நாள்கள் முதல் 200 நாள்களுக்குள் பணிபுரிந்த ஊழியா்களுக்கு தலா ரூ.195, -91 நாள்கள் முதல் 151 நாள்கள் வரை பணிபுரிந்த ஊழியா்களுக்கு தலா ரூ.85 வழங்கப்பட வேண்டும்.

இந்தத் தொகையை விதிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றி ஊழியா்களுக்கு வழங்க வேண்டும். அதே நேரம், இதற்கான செலவினத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்க வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்த சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT