தமிழ்நாடு

காற்றழுத்தத் தாழ்வு நிலை:தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN


சென்னை: குமரிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வியாழன் ,வெள்ளி ஆகிய இரண்டு நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் புதன்கிழமை கூறியது: மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி ஒரு காற்றழுத்தத்தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (ஜன.14,15) லேசானது முதல் மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜனவரி 16-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்....: சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில்

கடலூா் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டையில் 280 மி.மீ., , சேத்தியாத்தோப்பில் 210 மி.மீ., புவனகிரியில் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்தில் 190 மி.மீ., மணிமுத்தாறில் 170 மி.மீ., கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் 160 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழியில் 120 மி.மீ., தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூரில் 110 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கடலூா் மாவட்டம் விருத்தாசலத்தில் தலா 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT