முகப்பு
தமிழ்நாடு

திருப்பத்தூரில் மார்கழி இசைத் திருவிழா பரிசுகள் விநியோகம்

இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டலம் சார்பில் நடப்பெற்ற மார்கழி இசைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் விநியோகிக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
போட்டியில் பரிசுப் பெற்றவர்களுடன் இணை ஆணையர் செ.மாரிமுத்து.
பகிர்:

இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டலம் சார்பில் நடப்பெற்ற மார்கழி இசைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வேலூர் மண்டல அளவில் 2021-ஆம் ஆண்டிற்கான மார்கழி இசைத் திருவிழா(பாவை விழா) போட்டி நடைபெற்றது. அதையொட்டி திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடும் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

இணைய வழியான போட்டி திங்கள்கிழமை வேலூரில் உள்ள நாராயண ரெட்டியார் சத்திரத்தில் நடைபெற்றது. இதில், ஆன்லைன் மூலம் நடைபெற்ற இப்போட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை என மூன்று வகை 147 மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த 36 மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் தருமராஜா கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் செ.மாரிமுத்து மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் மா.மாதவன்,அ.பிரியா உமேஷ் குமார் பங்கேற்றனர். முடிவில் அறநிலையத்துறை திருப்பத்தூர் ஆய்வாளர் ந.திலக் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →