தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி பலியான பேருந்து பயணிகள் குடும்பத்துக்கு நிவாரண நிதி: தமிழக அரசு அறிவிப்பு

DIN


சென்னை: தஞ்சாவூரில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து மின் கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். விபத்து குறித்து அறிந்தவுடன் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தேன்.

இந்த விபத்தில் மூன்று போ் காயமடைந்துள்ளனா். விபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000-மும் , சாதாரண காயமடைந்தோருக்கு ரூ. 25,000-மும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT