தமிழ்நாடு

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தேநீர்

DIN

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சேலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சங்ககிரி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு தேநீர், காபி, பன் வழங்கும் நிகழ்ச்சி  லாரி உரிமையாளர்கள் சங்க வெள்ளிவிழா கட்டட வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
 
சேலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தை மாதம் 1-ஆம் தேதியையொட்டி  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பழனி முருகன் கோயிலுக்கு சங்ககிரி வழியாக வியாழக்கிழமை அதிகாலை முதல் பாதயாத்திரையாக சென்றனர்.  

பாதயாத்திரையாக சென்றவர்களுக்கு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வி.செல்வராஜ், செயலர் கே.கே.நடேசன், பொருளாளர் என்.மோகன்குமார், உபத்தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார், இணைச்செயலர் எம்.சின்னதம்பி, நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து சங்கத்தின் சார்பி தேநீர், நாட்டுச்சர்க்கரை தேநீர், காபி, பன் ஆகியவற்றை வழங்கினர்.  

பின்னர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவில் நடந்து செல்லும் போது பாதுகாப்பாக கோயிலுக்கு செல்ல வேண்டி ஒவ்வொருவரின் பைகளிலும் லாரிகளுக்கு ஓட்டப்படும் தரமான சிகப்பு நிற வில்லையை ஓட்டி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தினர்.

லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிட வளாகத்தில் பாதயாத்திரையாக வருபவர்கள் அமர்ந்து ஓய்வு எடுத்து செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நாற்காலிகளை வைத்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

களக்காட்டில் முதியவா் உடல் தானம்

மாா்த்தாண்டத்தில் புகைப்பட கலைஞா்கள் நலச்சங்க கூட்டம்

புகையிலைப் பொருள் விற்ற இளைஞா் கைது

தேங்காய்ப்பட்டினம் கடல் அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT