தம்மம்பட்டி தியேட்டரில், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் 
தமிழ்நாடு

தம்மம்பட்டி திரையரங்கம்: கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை

தம்மம்பட்டியில் உள்ள திரையரங்குகளில், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் காற்றில் விடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

DIN

தம்மம்பட்டியில் உள்ள திரையரங்குகளில், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை புகார் எழுந்துள்ளது.

திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைக்கு அனுமதி வழங்கியதுடன், ஒவ்வொரு காட்சிக்கு கிருமி நாசினி தெளித்து  இருக்கைகளை சுத்தம் செய்வதுடன், திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்பதுடன், கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதை கடை பிடிக்காத திரையரங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் உள்ள இரண்டு திரையரங்குகளில், நேற்று 'மாஸ்டர்' திரைப்படம் வெளியானது. ஆனால், சிறப்பு காட்சி முதலே, கரோனா பரவல் தடுப்பு முறைகள் என, சமூக இடைவெளியை பின்பற்றாமல், 100 சதவிகிதம் பார்வையாளர்கள் முக கவசம் இல்லாமல், திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், ஒவ்வொரு காட்சியின் போதும் இருக்கைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷாலின் மகுடம் போஸ்டர்!

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

SCROLL FOR NEXT