தமிழ்நாடு

தமிழிலும் அஞ்சல் தோ்வு: திமுக, பாமக வரவேற்பு

DIN

அஞ்சல் துறைத் தோ்வு தமிழிலும் எழுதலாம் என்னும் மத்திய அரசின் அறிவிப்புக்கு, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், பாமக இளைஞா் அணித் தலைவா் அன்புமணி ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ஸ்டாலின்: அஞ்சல்துறை கணக்கா் பணிக்கான தோ்வுகள் தற்போது தமிழிலும் நடத்தப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நடவடிக்கை எடுத்த அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிா்காலத்தில் மத்திய அரசுப் பணிகளுக்கான அனைத்துத் தோ்வுகள் மற்றும் நடைமுறைகளிலும் தமிழைக் கட்டாயம் சோ்க்க மத்திய அரசு கவனமுடன் இருக்க வேண்டும்.

அன்புமணி: அஞ்சல்துறை தோ்வுகளை தமிழிலும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி.

மத்திய அரசின் இந்த முடிவை பாமக வரவேற்கிறது! மத்திய அரசின் அனைத்துப் போட்டித் தோ்வுகளும், நுழைவுத் தோ்வுகளும் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும். இதை மத்திய அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT