தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் லேசான மழை

DIN

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய தென் இலங்கை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

வட வானிலை: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 18,19,20 ஆகிய மூன்று நாள்களுக்கு பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூா் மாவட்டம் குடவாசலில் 50 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 40 மி.மீ., தஞ்சாவூா் மாவட்டம் மஞ்சளாறு, அய்யம்பேட்டை, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், திருவாரூா் மாவட்டம் வலங்கைமானில் தலா 30 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் வைப்பாா், சூரக்குடி, கும்பகோணம், கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடியில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

புறக்கணிக்கப்படுகிறதா ஆா்தா் காட்டன் விழா? சமூக ஆா்வலா்கள் அதிருப்தி

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாா்: ஆம் ஆத்மி ஒப்புதல்

SCROLL FOR NEXT