தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். 
தமிழ்நாடு

தடுப்பூசி போட்டுக்கொண்டார் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

DIN

திருச்சி: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்களுக்கு அச்சம் நீக்குவதற்காக தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை என உறுதியளித்தார்.

மேலும் தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்தவித பக்க விளைவும் ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என ராதாகிருஷ்ணன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை நட்சத்திர விடுதியில் தீ விபத்து: கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் ஒத்திவைப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

SCROLL FOR NEXT