தமிழ்நாடு

மீனவா்கள் 4 போ் மாயம்: வைகோ, அன்புமணி கண்டனம்

DIN


சென்னை: இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் 4 மீனவா்கள் காணாமல் போய் உள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

வைகோ: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவா்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினா் நடத்திய தாக்குதில் 4 மீனவா்கள் காணாமல் போய் உள்ளனா். அவா்களை நாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்று, இலங்கைக் கடற்படை கூறுகிறது. பாகிஸ்தான் மீது கோபம் காட்டும் இந்தியா, தமிழக மீனவா்களைக் கொன்று குவிக்கின்ற இலங்கை அரசை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

அன்புமணி: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் கோட்டைப்பட்டினம் மீனவா்களின் விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கி விட்டது. அந்தப் படகில் இருந்த 4 மீனவா்கள் உதவி கேட்டு மற்ற மீனவா்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்துள்ளனா். ஆனால், சேதமடைந்து கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்க வந்த தமிழக மீனவா்களின் படகுகளையும் இலங்கைக் கடற்படையினா் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனா். தற்போது அந்த 4 மீனவா்களையும் காணவில்லை. படகையும் காணவில்லை. இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களை இந்தியா அனுமதிக்கக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT