தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 30,04,140 வாக்காளர்கள்!

சேலத்தில் புதன்கிழமை ஆட்சியர் சி.அ. ராமன் வெளியிட்ட பட்டியலில் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 30 லட்சத்து 4 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

DIN


சேலம்: சேலத்தில் புதன்கிழமை ஆட்சியர் சி.அ. ராமன் வெளியிட்ட பட்டியலில் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 30 லட்சத்து 4 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் திருத்தம்  உள்ளிட்ட பணிகளுக்காக நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. 

சேலம் மாவட்டத்திலுள்ள 11  தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் புதன்கிழமை வெளியிட்டார்.

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 14 லட்சத்து 95 ஆயிரத்து 165 ஆண் வாக்காளர்கள் ; 15 லட்சத்து 8 ஆயிரத்து 771 பெண் வாக்காளர்கள், இதர பிரிவைச் சேர்ந்த 204 வாக்காளர்கள் என மொத்தம் 30 லட்சத்து 4 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 46 ஆயிரத்து 391 பேர் 18  வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT