தமிழ்நாடு

கோவில்பட்டி கோட்டத்தில் 7.30  லட்சம் வாக்காளர்கள்

DIN


கோவில்பட்டி: கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

கோட்டாட்சியர் விஜயா இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம்,, வட்டாட்சியர்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), அய்யப்பன் (எட்டயபுரம்),  ரகுபதி (விளாத்திகுளம்), முத்து (ஓட்டப்பிடாரம்), தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் சுரேஷ், சண்முகவேல், திரவியம், அதிமுக ஒன்றிய செயலர் ஐயாத்துரை பாண்டியன், திமுக மேற்கு ஒன்றிய செயலர் பீக்கீலிபட்டி வீ. முருகேசன்ஆகியோர் உடனிருந்தனர்.

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,29,484  ஆண்கள், 1,35,385  பெண்கள்,  31  திருநங்கைகள் என மொத்தம் 2,64,900  வாக்காளர்கள் உள்ளனர்.

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,05,548  ஆண்கள், 1,09,991  பெண்கள், 4  திருநங்கைகள் என மொத்தம் 2,15,543  வாக்காளர்கள் உள்ளனர்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,22,372 ஆண்கள், 1,27,653  பெண்கள், 28  திருநங்கைகள் என மொத்தம் 2,50,053 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவில்பட்டி கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 7,30,496  வாக்காளர்கள் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் ரூ.8 கோடி பறிமுதல், 2 பேர் கைது

ஜெயக்குமாரின் செல்போன் எங்கே? புதிய சிசிடிவி காட்சிகள் வெளியானது!

உ.பி.: 2 புதிய வேட்பாளர்களை அறிவித்த பகுஜன் கட்சி!

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு!

‘அடங்காத அசுரன்’: ராயனின் முதல் பாடல் வெளியாகும் நேரம்!

SCROLL FOR NEXT