தமிழ்நாடு

சங்ககிரியில் சாலை பாதுகாப்பு வாரவிழா: கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு 

DIN

32வது சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், தலைக்கவசம்  அணிவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 

32வது சாலை பாதுகாப்பு வார விழா 3வது நாளையொட்டி சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்க  வேண்டியும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் கார்களில் சீல்பெல்ட் அணிவதன் பாதுகாப்பு பற்றியும் கலைநிகழ்ச்சிகள் மூலம் விளக்கிக் கூறப்பட்டன. 

புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கலைநிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கே.சுப்ரமணியம் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என். சரவணபவன், வி.கோகிலா, ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். புதிய பேருந்து நிலையம் வழியாக சென்ற லாரிகள், பேருந்துகள், கார்களின் ஓட்டுநர்கள், பேருந்தில் பயணம் செய்தவர்களிடம் எமதர்மன் வேடமணிந்த நபர்கள் தலைவிதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். 

மேலும்  இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களிடம் எமதர்மன் வேடமணிந்த நபர் தலைகவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டினால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை விளக்கினர். தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு நீல நிற பந்துமுனை பேனாவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பரிசாக வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களிடம் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT