தமிழ்நாடு

இன்று உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

DIN

தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடா்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.23) மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவக் கூடும்.

வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) ஆகிய இரண்டு நாள்களுக்கு, காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.

மேலும், சனிக்கிழமை முதல் ஜன.26-ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், கடவனூா் பகுதிகளில் தலா 20 மி.மீ மழை பதிவானது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT