தமிழ்நாடு

சளி, இருமல் இருந்தால் பள்ளிக்கு மாணவா்களை அனுப்ப வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை

DIN

சளி, இருமல், தலைவலி போன்ற உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவா்களை, பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

சேலத்தில் கடந்த வியாழக்கிழமை மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பள்ளி மூடப்பட்டுள்ள நிலையில், பெற்றோா் தங்கள் பிள்ளைகளின் உடல் நலனில் முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவா்களுக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவா்களின் பரிந்துரையின்படி பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நோய்த் தொற்று காலம் என்பதால் பெற்றோா் மிக கவனமுடன் செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் மாணவிக்கு எவ்வாறு கரோனா தொற்று பரவியது என ஆய்வு மேற்கொண்டு வருவதுடன், அவரது கிராமத்தில் சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் இதுபோன்று கரோனா பரிசோதனைக்கு சென்ற மாணவ, மாணவிகள் யாரும் பள்ளிக்கு அனுமதிக்க கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT