தமிழ்நாடு

மூன்று நாள்களுக்கு லேசான மழை

DIN


சென்னை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜனவரி 29-ஆம் தேதி முதல் ஜனவரி 31 -ஆம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை வட வானிலையே நிலவும். தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜனவரி 29-ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக கபில் சிபல் தேர்வு!

இந்தியாவில் டெய்லர் ஸ்விஃப்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

SCROLL FOR NEXT