மயிலத்தில் தைப்பூச விழா 
தமிழ்நாடு

மயிலத்தில் தைப்பூச விழா: பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்தனர்

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் தைப்பூச விழா வியாழக்கிழமை நடந்தது.  

DIN

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் தைப்பூச விழா வியாழக்கிழமை நடந்தது.  

தைப்பூச விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு மலையடிவாரத்திலுள்ள அக்னி குளக்கரையில் உள்ள சுந்தரவிநாயகர் கோயிலில் காவடிகளுக்குச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் அலகு குத்தி, காவடிகளை எடுத்துக்கொண்டு மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். 

பின்னர் மலைமீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனையடுத்து மாலை 6 மணிக்கு  1008  சங்காபிசேகம் மூலவருக்கு நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT